Free Video Downloader

நியூஸிலாந்து Vs இந்தியா: மூன்றாவது டி20 போட்டி ‘டை’ ஆனது – கோப்பையை கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா அணி


இந்தியா நியூஸிலாந்து டி20 தொடர்

பட மூலாதாரம், Getty Images

நியூஸிலாந்து, இந்தியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி ‘டை’ ஆனது. இதையடுத்து கோப்பையை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது.

இந்தியா – நியூஸிலாந்து இடையிலான மூன்றாவது டி20 ஆட்டம் நேப்பியரில் மழையால் தடைபட்டது. இன்றைய ஆட்டத்தில் சேஸிங்கின்போது  9 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 75 ரன்களை குவித்திருந்தது.

முன்னதாக, டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் பிலிப்ஸ் மற்றும் கான்வேயின் அரை சதத்துடன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு நியூஸிலாந்து ஆல் அவுட் ஆனது.

இதைத்தொடர்ந்து 161 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா ஆடி வந்த வேளையில் மழையால் ஆட்டம் தடங்கலானது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *