Free Video Downloader

மின் வேலியில் சிக்கி பலியான குட்டி யானையை புதைத்த விவசாயி கைது – என்ன நடந்தது?


எச்சரிக்கை: இந்த செய்தியில் உங்கள் மனதுக்கு சங்கடத்தை தரும் படங்கள், தகவல்கள் இருக்கலாம்.

படக்குறிப்பு,

குழிக்குள் புதைக்கப்பட்ட யானையின் சடலத்தை கிரேன் மூலம் மீட்கும் ஊழியர்கள்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை அருகே விவசாயி ஒருவர் அமைத்திருந்த மின்வெளியில் சிக்கி குட்டியானை ஒன்று இறந்துள்ளது. அதை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக குழி தோண்டி புதைத்த தந்தை மற்றும் இரண்டு  மகன்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள  அக்குபாய் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான எல்லப்பன்.

இவருடைய நிலத்திற்கு அடிக்கடி காட்டு பன்றிகள்  வந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் தமது நிலத்தில் பயிரிடப்பட்ட நெல்லை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்தார் எல்லப்பன்.

இதற்கிடையே, ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் என்ற காப்புக்காட்டுப் பகுதியில் நடமாடிய யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை, எல்லப்பனின் நிலப்பகுதியில் நுழைய முற்பட்டபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *