Free Video Downloader

கத்தார் 2022 அர்ஜென்டினா: சௌதி அரேபியாவிடம் ‘கால்பந்துக் கடவுள்’ லியோனல் மெஸ்ஸி வீழ்ந்தது எப்படி?


மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதிக் கோல் கணக்கு எப்படியிருக்கும் என்ற கேட்டபோது, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த போர்ச்சுகலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார். உடனிருந்த இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இன்னொருபடி மேலே போய் 5-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்றார்.

அவர்கள் மாத்திரமல்ல போட்டிக்கு முன்பு யாருமே அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி அரேபிய வெற்றி பெறும் என்று கருதியிருக்க மாட்டார்கள். ஏன், ஒரு கோல் அடிப்பதுகூட சாத்தியமில்லை என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியாக முடிந்துவிட்டது அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டி.

சௌதி அரேபியா தரவரிசையில் 51-ஆவது இடத்தில் இருக்கிறது. அர்ஜென்டினா அணி தரவரிசையில்  3-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த ஒரு புள்ளி விவரமே கணிப்புகள் எப்படியிருக்கும் என்று கூறிவிடும். கூடுதலாக கால்பந்து உலகில் இப்போது ‘கடவுள்’ என்று அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி இருக்கும் அணி என்பதால் யாருக்கும் அந்த அணியின் வெற்றி மீது சந்தேகமே எழவில்லை.

சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக 36 வெற்றிகளைப் பெற்ற அணி, அடுத்ததாக 37-ஆவது வெற்றியைப் பெற்று இத்தாலி அணியின் முந்தைய சாதனையைச் சமன் செய்யும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெஸ்ஸியின் அணிக்கு அதிர்ச்சியளித்துவிட்டது சௌதி அரேபியா.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *