Free Video Downloader

தி.மு.க. அமைச்சர்கள் பி.டி.ஆர். – ஐ.பெரியசாமி சொற்போருக்கு என்ன காரணம்?


பிடிஆர்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு,

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதும் அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பதிலடி அளித்ததும் ஆளும் தி.மு.கவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறையின் அண்மைக்கால செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டார்.

“செயல்பாட்டுத் திறன், தகவல், தொழில்நுட்பம் இதெல்லாம் மிகவும் சிறப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. இன்றைய சூழலில் முழுமையான கணினிமயமாக்கம் இல்லாமல் இம்மாதிரி சங்கங்களை இயக்குவது மிகவும் கடினமான பணி.

அதில் பல பிழைகள் வர வாய்ப்புண்டு. Aggregate Value பார்த்தீங்கன்னா இன்னும் எனக்குத் திருப்தி இல்லை. நிதியமைச்சராகக் கூறுகிறேன். இன்னும் சிறப்பிக்க பல வாய்ப்பு இருக்கு,” என்று கூறினார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *