Free Video Downloader

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி பதவிக்கு லெப். ஜெனரல் சையது ஆசிம் முனிர் பெயர் பரிந்துரை


  • எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி
  • பதவி, பிபிசி செய்தியாளர்
ஆசிம் முனிர்

பட மூலாதாரம், ISPR

பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் சையது ஆசிம் முனிர்  என்பவரை பாகிஸ்தான் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். அதைப் போல படைத் தளபதிகளின் கூட்டுக் குழு தலைவராக (Chairman of Joint Chiefs of Staff Committee) லெப். ஜெனரல் சஹிர் ஷம்ஷத் மிர்சா என்பவரை பரிந்துரைத்துள்ளார் பிரதமர்.

இந்தப் பரிந்துரைக்கு அந்நாட்டு ஜனாதிபதி முறைப்படி ஒப்புதல் அளித்து நியமனம் செய்வார்.

பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் காமர் ஜாவேத் பாஜ்வா நவம்பர் 29-ம் தேதி ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய பரிந்துரைகள் அடங்கிய குறிப்பினை ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிவைத்துள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *