Free Video Downloader

தமிழ்நாடு அரசியலில் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சி இயல்பானதா?


உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK / UDHAYANIDHI STALIN

இந்திய அரசியலில் முக்கிய ஆளுமையாக இருந்த மு.கருணாநிதியின் பேரன், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன், சட்டப்பேரவை உறுப்பினர், திமுகவின் இளைஞரணிச் செயலாளர், நடிகர், முக்கிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனத்தின் தலைவர், முரசொலி இதழின் ஆசிரியர் என பல முகங்களைக் கொண்டவராக தமிழ்நாட்டின் ஆட்சியில் முக்கியப் பங்கு வகிப்பவராக வளர்ச்சியடைந்து நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.



எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் அரசியல்வாதியான அவர், அரசியலுக்கு இணையாகவே திரைப்படத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.



அவரது அரசியல் இருப்பை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.



உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவுக்குள்ளேயே இருக்கிறது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ், திண்டுக்கல் ஐ.பெரியசாமி போன்ற அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் இது தொடர்பாக தீர்மானங்களை சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றினார்கள். இது தனக்கு ‘தர்மசங்கடத்தை’ உருவாக்குவதாக அப்போதே உதயநிதி ஓர் அறிக்கையின் மூலமாகக் கூறினார்.


ஆனால் அவர் அமைச்சராவது அல்லது ஆட்சியில் அவருக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படுவது என்பது இயற்கையாக நடக்கக்கூடியதாகவே இருப்பதாக அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் கூறுகிறார்கள்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *